June 15, 2025 8:48:28

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீனாவின் ‘சினோவெக்’ தடுப்பூசியை இலங்கையில் பயன்படுத்த அனுமதி

Photo : Twitter/Sinovac Biotech

சீனாவின் தயாரிப்பான ‘சினோவெக்’ கொவிட் தடுப்பூசியை இலங்கையில் அவசரகால பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ள  தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை அனுமதியளித்துள்ளது.

இலங்கையில் ஏற்கனவே மொடர்னா,  அஸ்ட்ராசெனெகா, சினோபார்ம், ஸ்புட்னிக் வீ மற்றும் பைஸர் ஆகிய தடுப்பூசிகளை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஆறாவதாக இலங்கையில் சீனாவின் உற்பத்தியான ‘சினோவெக்’ தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, உலக சுகாதார ஸ்தாபனத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து வகையான கொவிட் தடுப்பூசிகளும் இலங்கைக்கு கிடைத்திருப்பதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.