இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களில் மூன்றிலொரு பங்கினர் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதித்த பின்னர் அனைத்து மதங்களைச் சார்ந்தவர்களது உடல்களும் ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்டு வருகின்றன.
இதில் பெரும்பாலானவை முஸ்லிம்களுடையது என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, நேற்றுமுன்தினம் வெளியாகிய தகவல்களின் அடிப்படையில் கொரோனாவினால் உயிரிழந்த 1001 உடல்கள் அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
இதில் 946 முஸ்லிம்கள், 24 இந்துக்கள், 16 கிறிஸ்தவர்கள், மற்றும் 15 பௌத்தர்களின் உடல்கள் அடங்குவதாக சுகாதார அமைச்சின் மருத்துவ தொழில்நுட்ப சேவைகள் இயக்குநர் மருத்துவர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள இறக்காமம் பகுதி, கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட மற்றொரு இடமாக உள்ளது.
இருப்பினும், இன்றுவரை ஓட்டமாவடி புதைகுழியில் மட்டுமே அடக்கம் செய்யப்படுகின்றது.