July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு பிசிஆர் பரிசோதனையில் தளர்வுகள்

பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படாத நாடுகளில் இருந்து இலங்கைவரும் சுற்றுலா பயணிகளுக்கு சுகாதார அமைச்சினால் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அங்கீகரிக்கப்பட்ட கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக் கொண்ட சுற்றுலா பயணிகள் 7 நாட்களின் பின்னர் மீண்டும் பிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டியதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் சுற்றுலா பயணிகள் நாட்டுக்குள் அனுமதிப்பதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டும் பிசிஆர் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டாதவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்பட உள்ளது.

சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த தளர்வுகள் ஜுலை 17 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படாத நாடுகளில் இருந்து அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியின் 2 டோஸ்களை எடுத்துக்கொண்ட 14 நாட்களின் பின் இலங்கை வரும் சுற்றுலா பயணிகள் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் நாட்டின் அனைத்து சுற்றுலா தளங்களுக்கும் அனுமதிக்கப்படுவார்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், 2 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள்  7 நாட்களின் பின்னர் பி்சிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இதற்கான உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களை சுற்றுலா பயணிகளினால் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

மேலும், கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாடு காரணமாக பயண தடை செய்யப்பட்ட நாடுகளின் பட்டியலில் இருந்து வியட்நாம்  நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.