மட்டக்களப்பு மாவட்டத்தில் வீசிய மினி சூறாவளினால் வாகரை, வாழைச்சேனை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் 42 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ இணைப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாட் தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு இந்த மினி சூறாவளி ஏற்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது வீடுகளின் கூரைகளின் ஓடுகள் மற்றும் தகரங்கள் என்பன தூக்கி வீசப்பட்டுள்ளன.
இதனால் வாகரையில் 30 வீடுகளும், வாழைச்சேனையில் ஒரு வீடும், கிரானில் 10 வீடுகளும் கோறளைப்பற்று மத்தியில் ஒரு வீடும் சேதமடைந்துள்ளன.
மேலும் சூறாவளியால் இரண்டு வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் இந்த குடும்பங்கள் தற்காலிகமாக உறவினர்களின் வீடுகளில் தங்கியிருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ இணைப்பாளர் தெரிவித்துள்ளார்.