ஒழுக்கமான சமூகத்தை உருவாக்குவதற்காக 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இராணுவ முகாம்களில் பயிற்சிகளை வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
பாணந்துறையில் அலுபோமுல்ல மற்றும் ஹிரண பொலிஸ் நிலையங்களை திறந்துவைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர், தற்போது நாட்டில் ஒழுக்கம் சீர்கெட்டுப் போயுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இதற்கு முன்னர் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இராணுவ பயிற்சியை வழங்க வேண்டும் என்று நான் கூறும் போது, அதனை சிலர் விமர்ச்சித்ததாக குறிப்பிட்ட அமைச்சர், தனது இந்தக் கருத்து இராணுவ மயமாக்கல் அல்ல என்று தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பயிற்சியளிக்க வேண்டும் என்றால் அதற்கு இராணுவ முகாம்களே பொறுத்தமான இடம் என்றும், அங்கேயே அதற்கான ஒழுக்கமும், வசதிகளும் இருக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் பொருத்தமான கற்கை நெறியொன்றை அறிமுகப்படுத்தி அதனை செய்ய வேண்டும் என்று அமைச்சர் வீரசேகர தெரிவித்துள்ளார்.