இலங்கையில் கொரோனா வைரஸ் காரணமாக குழந்தை பிறப்பு விகிதம் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடு காரணமாக திருமண வைபவங்கள் நடக்காத காரணத்தினால் இந்த நிலமை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
வருடம் ஒன்றிற்கு 350,000 வரையில் குழந்தை பிறப்புக்கள் இடம்பெறும் நிலையில், கொவிட் தொற்று நிலைமையால் இந்த எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
இதேவேளை கொவிட் தொற்றுக் காலப்பகுதியில் கருத்தரிப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு சுகாதார அதிகாரிகள் கடந்த சில மாதங்களில் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.