எந்தவிதமான எதிர்ப்பு வந்தாலும் இலங்கை அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதில் உறுதியாகவுள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகமொன்றுக்கு பிரதமர் வழங்கியுள்ள செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“எந்தத் தரப்பிலிருந்து எதிர்ப்பு வந்தாலும் நாங்கள் அரசியலமைப்புத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் உரிய முறையில் சமர்ப்பித்து நிறைவேற்றுவோம்” என்று கூறினார் மகிந்த ராஜபக்ஷ.
“20ஆவது திருத்தம் குறித்து எவரும் தங்கள் கருத்தைச் சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கு சுதந்திரமுள்ளது. நாங்கள் நிச்சயமாக 20ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்வோம். அது குறித்து எந்தச் சந்தேகமும் இல்லை” என்றும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.