January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் கட்டுப்பாடுகள் சில தளர்த்தப்பட்டன

இலங்கையில் தற்போது அமுலில் உள்ள கொவிட் தடுப்பு நடவடிக்கைகளுடன் தொடர்புடைய சில கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் இன்று முதல் மத வழிப்பாட்டு இடங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் சமய நிகழ்வுகளை நடத்துவதற்கான ஒழுங்குவிதிகள் சிலவற்றை வெளியிட நடவடிக்கையெடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்தோடு மிருகக் காட்சிசாலை, சிறுவர் பூங்காக்கள், விலங்குகள் சரணாலயங்களை திறப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை தங்கு விடுதிகள், இசை நிகழ்ச்சி மண்டபங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இசை நிகழ்ச்சிகளை நடத்தும் போது மண்டப கொள்ளளவில் 50 சதவீத பார்வையாளர்களுக்கே அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.