January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மருதானை பொலிஸ் நிலையத்தில் தீ விபத்து!

கொழும்பு, மருதானை பொலிஸ் நிலையத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பொலிஸ் நிலையத்திலுள்ள உணவகம் மற்றும் பழைய விடுதி பகுதியிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் ஒழுக்கு காரணமாக அங்கு தீ பரவியிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்துள்ளனர்.