
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்வைத்துள்ள கொவிட் தடுப்பூசி திட்டம் நடைமுறை சாத்தியமானது என தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கை பிரதிநிதி அலகா சிங்,தடுப்பூசி ஏற்றும் இலக்கை இலங்கை அரசாங்கம் அடைவதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் ஒத்துழைப்பு வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தை கண்காணித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தை சேர்ந்தவர்களுக்கு சினோபார்ம் தடுப்பூசி ஏற்றும் திட்டம் குறித்த மத்திய நிலையத்தில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றது.காலை 8.30 மணியிலிருந்து பிற்பகல் 4.30 மணி வரை விஹாரமகாதேவி பூங்காவில் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது.
மேல் மாகாணத்தை சேர்ந்த 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்த மத்திய நிலையத்தில் தடுப்பூசியின் முதல் டோஸை ஏற்றிக்கொள்ள முடியும்.