January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் மீண்டும் 50ஐ கடந்த கொரோனா மரணங்கள்

இலங்கையில் நேற்றைய தினம் (14) 50 கொரோனா தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்ககளம் உறுதிப்படுத்தியுள்ளது.

19 பெண்களும் 18 ஆண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் 29 ஆண்களும், பெண்கள் 21 பேரும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்களில் 30 – 50 வயதுகளுக்கு இடைப்பட்ட 8 ஆண்களினதும், 4 பெண்களினதும் மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதில், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 21 ஆண்கள் மற்றும் 17 பெண்களின் மரணங்களும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 3,661 ஆக அதிகரித்துள்ளது.

அத்தோடு, இலங்கையில் இன்று (15) மாலை 6 மணிவரை மேலும் 967 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 280, 026 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, கொரோனா தொற்றில் இருந்து மேலும் 939 பேர் பூரண குணமடைந்து இன்று வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 53 ஆயிரத்து 953 ஆக அதிகரித்துள்ளது.