January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்துவதாக கூட்டமைப்பு எம்.பிகளிடம் அமெரிக்க தூதுவர் உறுதி

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் மற்றும் அதிகாரிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை இன்று சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பு இன்று காலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தனின் இல்லத்தில் நடைபெற்றள்ளது.

தமிழ்த் தேசிய பிரச்சனைக்கான தீர்வு சம்பந்தமாக இலங்கை வழங்கியிருக்கும் வாக்குறுதிகளின் அடிப்படையில் செயலாற்ற வேண்டும் என்பதை தாம் தொடர்ந்து வலியுறத்துவதாக அமெரிக்க தூதுவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் உறுதியளித்துள்ளார்.

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

https://twitter.com/TNAmediaoffice/status/1415588955563520001?s=20