
கொரோனா தொற்றின் புதிய ‘டெல்டா’ வைரஸ் பரவல் அபாய வலயமாக கொழும்பு நகரம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு நகரை அண்மித்த பகுதிகளில் ‘டெல்டா’ வைரஸ் தொற்றுடன் 14 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் தலைமை மருத்துவ அதிகாரி ருவன் விஜயமுனி குறிப்பிட்டுள்ளார்.
உருமாறிய கொரோனா வைரஸ் வகைகள் பரவுவது கொழும்பு நகரில் தீவிரமடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உருமாறிய டெல்டா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்கள் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவ அதிகாரி ருவன் விஜயமுனி குறிப்பிட்டுள்ளார்.
டெல்டா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களின் பரிசோதனை முடிவுகள் சுகாதார அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், உருமாறிய வைரஸ்கள் தொடர்பாக சுகாதார அமைச்சு மேலதிக ஆய்வுகளை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
‘டெல்டா’ வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ஹேமன்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.