முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்டு இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நாட்டின் எந்தப் பாகத்துக்கும் பயணிக்கலாம் என்று சுற்றுலாத்துறை அதிகாரசபை தெரிவித்துள்ளது.
தடுப்பூசி டோஸ்கள் இரண்டையும் பெற்றுக்கொண்டு இலங்கைக்கு வரும் பயணிகளுக்கு முதலாம் நாள் மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனையில் நோய்த் தொற்று இல்லை என உறுதியாகும் போது, தனிமைப்படுத்தல் இன்றி பயணிக்கலாம் என்று குறித்த அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இவ்வாறான சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்து 7 ஆவது நாள், சுகாதார அமைச்சின் அனுமதியைப் பெற்ற ஆய்வு கூடமொன்றில் இரண்டாவது பிசிஆர் பரிசோதனையையும் செய்துகொள்ள வேண்டும் என்ற வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு 72 மணி நேரத்துக்கு முன்னர் பெற்றுக்கொண்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சு வெளிநாட்டு பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறது.