July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 50,000 பேருக்கு எதிராக வழக்கு!

இலங்கையில் கொவிட் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் நேற்றைய தினத்தில் 190 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்ட 2020 ஒக்டோபர் 30 ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில், இந்தச் சட்டத்தை மீறிய 50,027 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இவ்வாறாக கைது செய்யப்பட்டவர்களில் 43,000 பேருக்கு எதிராக இதுவரையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 7000 பேருக்கு எதிராக வழங்குத் தாக்கல் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சமூக இடைவெளியை பேணாமை, முகக் கவசம் அணியாது பொது இடங்களில் சுற்றித்திரிந்தமை, பயணக் கட்டுப்பாட்டை மீறி வீதிகளில் பயணித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.