July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மேல் மாகாணத்தில் 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பம்!

மேல் மாகாணத்தில் உள்ள 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் வியாழக்கிழமை  (15) முதல் சினோபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட உள்ளதாக கொவிட் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

இந்த தடுப்பூசி வழங்கும் மையம் விகார மகாதேவி பூங்காவின் திறந்த மண்டபத்தில் காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இராணுவ மருத்துவ குழுக்களினால் முன்னெடுக்கப்பட உள்ளது.

தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் தமது வதிவிடத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களை சமர்ப்பித்து தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடியும்.

இதன் படி, தேசிய அடையாள அட்டை, மின் அல்லது தொலைபேசி பட்டியல், அல்லது மேல் மாகாணத்தில் நிரந்தர வதிவிடத்தை உறுதிப்படுத்தும் சான்றிதல் அல்லது தேர்தல் பட்டியலின் பிரதி அல்லது கிராம வேகரிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட சான்றிதழ் என்பவற்றை சமர்ப்பிக்க முடியும்.