January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இராணுவக் கோப்ரல் காமினி குலரத்னவின் நினைவு நிகழ்வு

கிளிநொச்சி ஆனையிறவு பகுதியில் அமைக்கப்பட்டள்ள இராணுவ கோப்ரல் காமினி குலரத்னவின் நினைவு நிகழ்வு இன்று இடம்பெற்றது.

கிளிநொச்சி இராணுவத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

1991 ஆம் ஆண்டு ஜுலை 14 ஆம் திகதி ஆனையிறவு பகுதியில் தாக்குதல் நடத்த வந்த விடுதலைப்புலிகளின் இரும்புக் கவச வாகனத்தினை தகர்த்த இராணுவ வீரர் கோப்ரல் காமினி குலரத்னவின் நினைவு தூபி ஆனையிறவு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த கனரக வாகனமும் அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த இராணுவ வீரர் உயிரிழந்த நாளான இன்று அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் கிளிநொச்சி இராணுவ தலைமைக் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் எச்.பி.ரணசிங்க, வன்னி இராணுவ படைத்தலைமையக கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் டி.எம்.எச்.டி.பண்டார, இராணுவ உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இதன்போது இராணுவ மரியாதை அணிவகுப்பும் இடம்பெற்றது.

This slideshow requires JavaScript.