கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள இலங்கை ஆசியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் இன்று வாகனப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம், அரச தாதியர் சங்கம், இலங்கை வங்கி ஊழியர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இந்தப் பேரணியை நடத்தின.
கொழும்பு தாமரைத் தடாக மண்டபத்திற்கு அருகில் இருந்து புறக்கோட்டை வரையில் இந்தப் பேரணி நடத்தப்பட்டதுடன், இதில் நூற்றுக் கணக்கானோர் கலந்துகொண்டிருந்தனர்.
பல்வேறு வாகனங்களில் பதாகைகளை காட்சிப்படுத்திவாறு இந்தப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.