
சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளரும், பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளருமான விசேட மருத்துவ நிபுணர் ஹேமன்த ஹேரத் வீட்டில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிபுரிகின்ற சுகாதார அமைச்சின் கல்வி, பயிற்சி மற்றும் ஆராய்ச்சிப் பிரிவில் பணிபுரிகின்ற ஐவர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து மருத்துவ நிபுணர் ஹேமன்த ஹேரத்தை வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறு சுகாதார அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.
இந்த நிலையில், பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமன்த ஹேரத்துடன் குறித்த பிரிவில் பணியாற்றிய மேலும் சிலரை வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.