இலங்கைக்கான ஜெர்மனி தூதுவர் ஹொல்கர் செயுபேர்ட் மற்றும் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு நிதி அமைச்சில் இடம்பெற்றுள்ளது.
அண்மையில் நிதி அமைச்சராகப் பதவியேற்ற பஸில் ராஜபக்ஷவுக்கு ஜெர்மனி தூதுவர் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் பொதுவான பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக ஜெர்மனி தூதுவர் தெரிவித்துள்ளார்.
நியாயமான மற்றும் சாத்தியமான சந்தர்ப்பங்களில் ஜெர்மனி இலங்கைக்கு ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக ஹொல்கர் செயுபேர்ட், நிதி அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.