January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஹரின் பெர்னாண்டோ செப்டம்பர் முதலாம் திகதி வரை கைது செய்யப்பட மாட்டார்’: சட்டமா அதிபர்

பாராளுமன்ற ஹரின் பெர்னாண்டோ இவ்வருடம் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி வரை கைது செய்யப்பட மாட்டார் என்று சட்டமா அதிபர் திணைக்களம் உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ கைது செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், தான் கைது செய்வதைத் தடுக்குமாறு அவர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனு இன்று உயர் நீதிமன்றத்தில் மூன்று நீதியரசர்கள் அடங்கிய குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, ஹரின் பெர்னாண்டோ செப்டம்பர் முதலாம் திகதி வரை கைது செய்யப்பட மாட்டார் என்று சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி வெளியிட்ட கருத்தொன்று தொடர்பிலேயே, ஹரின் கைது செய்யப்பட இருந்தார்.