February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மன்னாரில் சிற்றாலய சொரூபங்கள் மீதான தாக்குதல்கள் குறித்து பொலிஸார் விசாரணை

மன்னார் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மூன்று இடங்களில் அமைந்துள்ள கத்தோலிக்க சிற்றாலய சொரூபங்கள் மீது இன்று (14) அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மன்னார் வயல் வீதி பகுதியில் காணப்படுகின்ற இரு சொரூபங்களும், பள்ளிமுனை பிரதான வீதியில் அமைந்துள்ள சொரூபம் ஒன்றும் சேதமாக்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இனந்தெரியாத நபர்கள் இவற்றின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்ட நிலையில், தடயவியல் பொலிஸார் அங்கு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, கடந்த திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளிலும் இதேபோன்று மேலும் சில சிற்றாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதன்படி இதுவரையில் அங்கு கடந்த சில நாட்களுக்குள் 6 சிற்றாலயங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.