January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எக்ஸ்- பிரஸ் பீடர்ஸ் நிறுவனம் இலங்கைக்கு 3.6 மில்லியன் டொலர் நஷ்டஈடு வழங்கியது

எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பலின் முகவர் நிறுவனமாக எக்ஸ்- பிரஸ் பீடர்ஸ், இலங்கைக்கு முதலாம் கட்ட நஷ்டஈட்டு தொகையை வழங்கியுள்ளது.

முதலாம் கட்ட நஷ்டஈடாக 3.6 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் முதலாம் கட்ட நஷ்டஈடாக 700 மில்லியன் ரூபாய் கோரியிருந்த நிலையில், இந்த தொகை வழங்கப்பட்டுள்ளது.

கப்பல் விபத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கு இந்த பணத் தொகை பயன்படுத்தப்படவுள்ளது.

அடுத்த கட்ட நஷ்டஈட்டுத் தொகையைப் பெற்றுக்கொள்வதற்கான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மூழ்கிய கப்பலில் எண்ணெய்க் கசிவு ஏற்படுகின்றதா என்பதை நாம் தொடர்ந்தும் அவதானித்து வருவதாகவும், சுற்றாடல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு தாம் தொடர்ந்தும் ஒத்துழைப்பதாகவும் எக்ஸ்- பிரஸ் பீடர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.