July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்!

அரச நிறுவனங்களின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயிலுனர்கள் இன்று அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட தொழிற்சங்க உறுப்பினர்களை கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியமைக்கு எதிராக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் தொடர்பான சட்டமூலத்திற்கு எதிராக ஆசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட சங்கங்களினால் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், அந்த ஆர்ப்பாட்டங்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து அவற்றில் கலந்துகொண்ட பலர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இதனை கண்டித்தும், கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களை வீடுகளுக்கு அனுப்புமாறும் வலியுறுத்தி ஆசிரியர் சங்கங்கள் தொழிற்சங்கப் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், அந்தப் போராட்டத்துடன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயிலுனர்களும் இணைந்துகொண்டுள்ளனர்.