January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். உள்ளிட்ட 9 மாவட்டங்களில் 29 பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

Lockdown or Curfew Common Image

யாழ்ப்பாணம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 29 பிரதேசங்கள் அதிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இன்று காலை 6 மணி முதல் குறித்தப் பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி யாழ்ப்பாணம் மாவட்டத்தின் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாவட்கட்டு ஜே/131 கிராம சேவகர் பிரிவு, யாழ். பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ரெக்லமேஷன் மேற்கு ஜே/69 மற்றும் குருநகர் மேற்கு ஜே/71 கிராம சேவகர் பிரிவுகள், ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காரைநகர் கிராம சேவகர் பிரிவின் கள்ளித்தேரு மற்றும் கல்வந்தாழ்வு பிரதேசங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் புதிய காத்தான்குடி வடக்கு, புதிய காத்தான்குடி தெற்கு, கரபலா வீதி, ஏ.எல்.எஸ்.மாவத்தை, நூரனியா மயான வீதி ஆகிய கிராம சேவகர் பிரிவுகள், வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரைந்துறைச்சேனை முதலாம் குறுக்குத் தெரு மற்றும் பிரைந்துறைச்சேனை 2 ஆம் குறுக்குத் தெரு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பதுளை, நுவரெலியா, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.