January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாகாணங்களுக்கு இடையில் புதிதாக 41 ரயில் சேவைகள்

அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்காக மாகாணங்களுக்கு இடையில் புதிதாக 41 ரயில் சேவைகள் புதன்கிழமை (14) முதல் இடம்பெறவுள்ளன.

இதற்கமைவாக கொழும்பு கோட்டையிலிருந்து கண்டி, றம்புக்கணை ,மஹவ, சிலாபம் வரையில் ரயில் சேவைகள் இடம்பெறும் என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள திணைக்களம்; மருதானையில் இருந்து பெலியத்த மற்றும் காலி வரையில் ரயில் சேவை இடம்பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளது. புதன்கிழமை தொடக்கம் பிரதான ரயில் பாதையில் 42 ரயில் சேவைகளும், வடக்கு ரயில் பாதையில் 2 ரயில் சேவைகளும், கரையோரப் பாதையில் 44 ரயில் சேவைகளும் இடம்பெறவுள்ளன.

புத்தளம் பாதையில் 14 ரயில் சேவைகளும், களனி வெளி ரயில் பாதையில் 10 ரயில் சேவைகளும் இடம்பெறவுள்ளன. நாளாந்தம் 112 ரயில் சேவைகள் இடம்பெறும் என்றும் திணைக்கள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.