July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பொது பல சேனா அமைப்பை தடை செய்ய வேண்டும் என அமைச்சரவை உப குழு பரிந்துரைக்கவில்லை’

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான அமைச்சரவை உப குழு பொதுபல சேனா அமைப்பை தடை செய்ய பரிந்துரைக்கவில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சரவை இணை பேச்சாளரான அமைச்சர் ரமேஷ் பத்திரன இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

‘பல விடயங்கள் குறித்து ஆராய்ந்த அமைச்சரவை உபகுழு பொதுபல சேனாவை தடை செய்ய வேண்டிய அவசியமில்லை என தீர்மானித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு மாத்திரமே தடை குறித்து தெரிவித்திருந்தது.சி.ஐ.டி.யினரும் ஏனையவர்களும் இந்த அறிக்கை குறித்து தங்கள் சுயமதிப்பீடுகளை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் குற்றவியல் புலனாய்வுத்துறை மற்றும் பிற சட்ட அமுலாக்க அதிகாரிகளின் அறிக்கை எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் பின்னரே அமைச்சரவை உப குழு பொது பல சேனா அமைப்பின் தடை குறித்து முடிவெடுக்கும் என்று ரமேஷ் பத்திரன மேலும் குறிப்பிட்டுள்ளார்.