July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உள்ளூராட்சி மன்றங்களில் கலப்பு விகிதாசார முறையை 70, 30 என்ற வீதத்தில் மாற்றியமைக்குமாறு மீளாய்வுக்குழு பரிந்துரை!

உள்ளூராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் போது தற்போது பின்பற்றப்படும் 60, 40 கலப்பு விகிதாசார முறையை எதிர்வரும் காலத்தில் 70, 30 என்ற வீதத்தில் மாற்றியமைக்குமாறு உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறை மீளாய்வுக் குழு தனது அறிக்கையில் அரசாங்கத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.

உள்ளூராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்களை தெரிவு செய்யும் போது 60 வீதம் தொகுதி அடிப்படையிலும் ஏனைய 40 வீதம் விகிதாசார முறையிலும் தற்போது காணப்படுகிறது.

அதனை 70 வீதம் தொகுதி அடிப்படையிலும் 30 வீதம் விகிதாசார முறையின் கீழும் என்ற அடிப்படையில் மாற்றியமைக்குமாறு குழு பரிந்துரை செய்துள்ளது.

நிலையற்ற உள்ளூராட்சி மன்ற கட்டமைப்பொன்று ஏற்படுவதற்கு இருக்கும் வாய்ப்பை குறைப்பதே இதன் நோக்கமாகும் என்றும் அந்த குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை,உள்ளூராட்சி மன்றங்களில் தற்போது இருக்கும் 8000 பேர் வரையான உறுப்பினர்களின் எண்ணிக்கை எதிர்வரும் தேர்தலின் போது 6,500 வரை குறைய வேண்டுமெனவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறைமை தொடர்பாக மீளாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட குழு அதன் அறிக்கையை மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனிடம் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.