
பொருளாதார கொள்கைகள், திட்ட அமுலாக்கல் அமைச்சின் செயலாளராக சிரேஷ்ட நிர்வாக அதிகாரி அனுஷ பெல்பிட்ட நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் அமைச்சரவை பொறுப்புகளில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்புக்கு அமைய பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட செயற்படுத்துகை என்ற புதிய அமைச்சு விசேட வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, பொருளாதார கொள்கைகள், திட்ட அமுலாக்கல் அமைச்சராக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்து கொண்டிருந்தார்.
இந்நிலையிலேயே, தற்போது குறித்த அமைச்சின் செயலாளராக சிரேஷ்ட நிர்வாக அதிகாரி அனுஷ பெல்பிட்ட நியமிக்கப்பட்டுள்ளார்.