ஹெந்தல, கெரவலப்பிட்டிய திரவ இயற்கை எரிவாயு மின் நிலையத்தின் அனைத்து நடவடிக்கைகளையும், அமெரிக்க நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைக்க முயற்சி நடைபெறுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக குற்றம் சாட்டினார்.
இன்று (13) ஊடகங்களுக்க உரையாற்றிய அவர், இது குறித்து நினைவூட்டல் ஒன்று நிதியமைச்சரால் அமைச்சரவைக்கு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர்.ஆர்ட்டிகல, நியூயோர்க்கை தளமாகக் கொண்ட நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையின் எரிசக்தி கட்டமைப்பு மிகவும் சிறியது மற்றும் எரிசக்தி சந்தையின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்பவர் இலங்கையை கட்டுப்படுத்த முடியும் என திசாநாயக எச்சரிக்கை விடுத்தார்.
கெரவலப்பிட்டிய திண்ம கழிவு மின் நிலையத்தை வைத்திருக்கும் நிறுவனத்திடமிருந்து அரசாங்கத்தின் 40% பங்குகளை கொள்வனவு செய்ய பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் அவர் மேலும் கூறினார்.
அத்தோடு, கெரவலப்பிட்டிய மின் நிலையத்தின் பங்குகளை மாற்றுவதற்கு அமைச்சரவை இணங்கியுள்ளதாகவும் அனுரகுமார திசாநாயக கூறினார்.
திரவ இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தின் ஊடாக ஆரம்ப கட்டமாக தேசிய மின் கட்டமைப்பில் 300 மெகாவொட் மின்சாரம் இணைக்கப்படுகின்றது.
இந்த திட்டத்தின் படி 2025 ஆம் ஆண்டில் 1,000 மெகாவொட்டிற்கு மேல் மின் உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த உயிரியல் மின் உற்பத்தி நிலையம் இறுதியில் இலங்கையில் மிகப்பெரிய மின் நிலையமாக மாறும்.ஒரு அமெரிக்க நிறுவனத்திற்கு இதன் 40% பங்குகளை வழங்கும் முயற்சிகளை அமெரிக்க குடிமகனான நிதி அமைச்சரினால் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்!