January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் சேதனப் பசளை தயாரிக்கும் விவசாயிகளுக்கு ஊக்குவிப்புக் கொடுப்பனவு

இலங்கையில் சேதனப் பசளையை தயாரித்து தமது விவசாய நிலங்களுக்குப் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு ஊக்குவிப்புக் கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

2021/2022 பெரும்போகத்திற்காக 800,000 ஹெக்டேர் அளவிலான நெற் செய்கைக்கு சேதனப் பசளை தயாரித்துக் கொள்வதற்காக வேலைத்திட்டத்தின் கீழ் இந்தக் கொடுப்பனவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, சேதனப் பசளையை தயாரித்து தமது விவசாய நிலங்களுக்குப் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 12,500 ரூபா வீதம் உயர்ந்தபட்சம் 2 ஹெக்டேர்களுக்கு அதிகரிக்காமல் ஊக்குவிப்புக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

இது தொடர்பில் கமத்தொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.