November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உலகெங்கிலும் இருந்து பௌத்த வழிபாட்டுத் தலங்கள் பற்றிய தகவல்களை சேகரிக்கும் இலங்கை

உலகெங்கிலும் உள்ள பௌத்த வழிபாட்டுத் தலங்கள் பற்றிய தகவல்களை சேகரித்து ஆவணப்படுத்த வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் அறிவுறுத்தலின் பேரில் செயற்படுத்தப்பட்டு வரும் இந்தத் திட்டத்தின் மூலம் உலகெங்கிலும் உள்ள பௌத்த நாடுகளுடனான இலங்கையின் உறவை விரிவுபடுத்த வெளிநாட்டு அமைச்சு கவனம் செலுத்தியள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் ஈடுபாட்டுடன் இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக செயற்படுத்திக் கொள்வதற்கு இலங்கையின் தலைமை மதகுருமார்களின் உதவியையும் வழிகாட்டுதலையும் அமைச்சர் எதிர்பார்க்கின்றார் என்று வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

உலகெங்கிலும் உள்ள பௌத்த வழிபாட்டுத் தலங்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்தல் தொடர்பான முதல் ஆவணத்தை வெளிநாட்டு அமைச்சின் கொன்சியூலர் பிரிவின் பதில் பணிப்பாளர் நாயகம் விஸ்வநாத் அப்போன்சோ அண்மையில் அமைச்சர் தினேஷ் குணவர்தனவிடம் கையளித்திருந்தார்.