May 29, 2025 21:45:04

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மன்னாரில் கரையொதுங்கிய இந்தியப் படகு தொடர்பில் விசாரணை

மன்னார் சௌத்பார் கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்கிடமான படகொன்று கரையொதுங்கியுள்ளது.

இது இந்தியாவின் நாட்டுப் படகு வகையை சேர்ந்தது என்று மன்னார் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

கரையொதுங்கியுள்ள குறித்த படகு பதிவு இலக்கம் , உரிமையாளர் பெயர் என எதுவுமே பொறிக்கப்படாத நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

காற்றின் வேகம் காரணமாக இங்கு கரையொதுங்கியுள்ளதா? அல்லது சட்ட விரோத கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டு பின்னர் இந்தப் படகு கைவிடப்படுள்ளதா? என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.