January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

5 மாடி கட்டடம் தாழிறக்கம்: குருநாகல் – கண்டி வீதியில் கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு

வீதியோரத்தில் இருந்த 5 மாடிக் கட்டடம் ஒன்று தாழிறங்கியுள்ளதால், குருநாகல் – கண்டி வீதியில் கனரக வாகனங்கள் பயணிப்பதைத் தவிர்க்குமாறு தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

குருநாகல் – கண்டி வீதியில் கட்டுகஸ்தோட்டை முச்சந்திக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டுவரும் ஐந்து மாடிக்கட்டடம் ஒன்று நேற்று இரவு தாழிறங்கியுள்ளது.

இதனால் எந்தவித உயிராபத்துக்களும் ஏற்படவில்லை. எனினும் இந்த சம்பவத்தால் வீதியின் ஒருபகுதி சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து மறு அறிவித்தல் வரையில் அந்த வீதியூடான கனரக வாகங்கள் பயணிப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.