ஐரோப்பிய ஒன்றியம், பெல்ஜியம் மற்றும் லக்சம்பர்க் ஆகிய நாடுகளுக்கான இலங்கை பிரதிநிதிகள் பசுமை திட்டங்களுக்கான கடன் வசதிகள் குறித்து ஐரோப்பிய முதலீட்டு வங்கியுடன் பேச்சு நடத்தியுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய முதலீட்டு வங்கி அதிகாரிகளுக்கும் இலங்கை பிரதிநிதிகளுக்கும் இடையே ஒரு மெய்நிகர் சந்திப்பை பிரஸ்ஸல்ஸில் உள்ள இலங்கை தூதரகம் கடந்த புதன்கிழமை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த சந்திப்பில் ஐரோப்பிய முதலீட்டு வங்கி அதிகாரிகள், வங்கியின் பசுமை கருத்துத் திட்டத்தின் கீழ் உள்ள நிதி முறைகளை விளக்கிய அதேவேளை, ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் நிதியுதவிக்காக இலங்கையிலிருந்து திட்ட முன்மொழிவுகளை பரிசீலிக்க தயாராக இருப்பதாகவும் சுட்டிக்காட்டினர்” என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பில் பெல்ஜியம், லக்சம்பர்க் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதர், ஐரோப்பிய முதலீட்டு வங்கி அதிகாரிகள், இலங்கை மத்திய வங்கி அதிகாரிகள், முதலீட்டு சபையின் தலைவர் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.