January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் மேலும் 31 கொவிட் மரணங்கள் பதிவு; புதிய தொற்றாளர்கள் எண்ணிக்கை உயர்வு!

இலங்கையில் மேலும் 31 கொவிட் தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

15 பெண்களும் 16 ஆண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 3,533 ஆக அதிகரித்துள்ளது.

அத்தோடு, இலங்கையில் இன்று (12) மேலும் 1488  பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 76,026 ஆக பதிவாகியுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 26,363 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்தோடு, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 2 இலட்சத்து 46 ஆயிரத்து 241 ஆக உயர்வடைந்துள்ளது.