
நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
தனிமைப்படுத்தல் சட்டத்தை ஒழுங்காக பயன்படுத்தும் அதிகாரத்தையே பொலிஸ் உட்பட ஏனைய நிறுவனங்களுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் மூலம் வழங்கப்பட்டுள்ளதாக குறித்த சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் டாக்டர் செனால் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் சட்டத்தைப் பயன்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரைக் கட்டுப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு அரசியல் தரப்புக்கும் தனிநபர்களுக்கும் விரும்பிய விதத்தில் சட்டத்தைப் பயன்படுத்த முடியாது என்றும் டாக்டர் செனால் பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.
தனிமைப்படுத்தல் சட்டத்தை பொலிஸார் துஷ்பிரயோகம் செய்வதென்றால், நாட்டினுள் ‘ஒரே சட்டம்’ என்ற கோட்பாட்டை பின்பற்ற முடியாது போகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், சுகாதார சேவைகள் பணிப்பாளரைக் கேட்டுக்கொண்டுள்ளது.