November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கொரோனாவிலிருந்து குணமடையும் வரை தடுப்பூசி ஏற்றிக்கொள்ள வேண்டாம்’;சுகாதார அமைச்சு வலியுறுத்தல்!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தொற்றிலிருந்து முழுமையாக குணமடையும் முன்னர் தடுப்பூசி ஏற்றிக் கொள்ள வேண்டாம் என சுகாதார பிரிவினர் மக்களை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

ஒரு செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத், சிலர் கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்ட உடன் தடுப்பூசி பெற்றுக் கொள்ள முனைவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

“ஒருவர் கொவிட் தொற்றுக்குள்ளானதன் பின்னர் தடுப்பூசி ஏற்றிக் கொள்வதால் பயனில்லை. எனவே, வைரஸ் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்ததன் பின்னர் தடுப்பூசி போட்டுக் கொள்ள பரிந்துரைக்கப்படுவதாக அவர் மேலும் கூறினார்.

மேலும், எனவே வைத்தியர்களின் பரிந்துரைக்கு அமைய 14 நாட்களுக்கு பிறகு தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்ளுமாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் கேட்டுக் கொண்டார்.

அத்தோடு நாட்டில் பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட போதிலும் நாடு இன்னும் அவதானமான நிலையில் இருந்து மீளவில்லை என பிரதி பணிப்பாளர் நாயகம் வலியுறுத்தினார்.

“பால மாதங்களுக்கு தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளுக்குள் இருக்கமுடியாது, நாடு முன்னேற வேண்டும்,” என்றார்.

“மற்றொரு கொரோனா அலைகளை தடுக்க சுகாதார வழிகாட்டுதல்களையும் நடைமுறைகளையும் கண்டிப்பாக பின்பற்றுமாறு மக்களை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்” என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் கேட்டுக் கொண்டார்.