இலங்கையை டிஜிட்டல் சுற்றுலா பயணிகளின் மனதைக் கவரும் வகையில் மேம்படுத்தும் நோக்கில் நீண்டகால விசா முறைமையை அறிமுகப்படுத்தவும், வரி நிவாரணம் வழங்கவும் விசேட அமைச்சரவை பத்திரமொன்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், டிஜிட்டல் சுற்றுலாப் பயணிகளுக்கு நாட்டிற்குள் பல மாதங்கள் அல்லது பல வருடங்கள் என தங்கியிருப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவுள்ளதுடன், அதிகளவான வெளிநாட்டு செலாவணிகளையும் பெற்றுக்கொள்ள முடியும் என சுற்றுலாத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது வாழ்க்கையை டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சுற்றுலாப் பயணிகளாக கொண்டு செல்கின்ற நபர்களை டிஜிட்டல் சுற்றுலா பயணிகள் என அழைப்பர்.
கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் புதிதாக உருவாகி வரும் சுற்றுலாத் துறையில் புதிய ஓர் அங்கமாக டிஜிட்டல் சுற்றுலாத்துறை காணப்படுவதாக சுற்றுலாத்துறை அமைச்சு மேலும் கூறியுள்ளது.