January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் வணிகக் கப்பலுக்கு எரிபொருள் நிரப்பும் போது எண்ணெய்க் கசிவு

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் எண்ணெய்க் கசிவு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

துறைமுகத்துக்கு வந்த ஒரு வணிகக் கப்பலுக்கு எரிபொருள் நிரப்பும் போது, இந்த எண்ணெய்க் கசிவு ஏற்பட்டதாக துறைமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

எண்ணெய்க் கசிவால் ஏற்படும் கடல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தி, சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளை உடன் ஆரம்பித்ததாக துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபைக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எண்ணெய்க் கசிவால் ஏற்பட்ட கடல்சார் சுற்றாடல் மாசுபாடு அடுத்த சில தினங்களில் சீர்செய்யப்படும் என்று ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளார்.