January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாகாணங்களுக்கு இடையே பொது போக்குவரத்தை முன்னெடுக்க தீர்மானம்!

இலங்கையில் மாகாணங்களுக்கு இடையில் பொது போக்குவரத்து சேவையை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சமுதாய பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

மாகாணங்களுக்கு இடையே அத்தியாவசிய சேவைகளை எந்தவித இடையூறும் இல்லாமல் முன்னெடுக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதன்படி, புதன்கிழமை (14) முதல் மாகாணங்களுக்கு இடையே அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் பொது போக்குவரத்து சேவை செயல்படும் என அவர் கூறினார்.

10 ஆம் திகதி சுகாதார அமைச்சு வெளியிட்ட கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகளுக்கு அமைய மாகாணங்களுக்கு இடையிலான பயண கட்டுப்பாடு மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே மேல் மாகாணத்தில் இன்று (12) முதல்  ரயில் சேவைகளின் எண்ணிக்கை 103 ஆக உயர்த்தப்படும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.