July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

18 வயதிற்கு மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி வழங்க சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

இலங்கையில் 18 வயதிற்கு மேற்பட்ட 2 -3 மாதங்களில் உள்ள  தகுதியுடைய அனைத்து கர்ப்பிணிப் பெண்களுக்கும் தடுப்பூசி ஏற்றுமாறு அனைத்து மாகாண சுகாதார பணிப்பாளர்களுக்கும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன இன்று (12) வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தில் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதால் எந்தவொரு ஆபத்து நிலையும் ஏற்படாது என தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு போதுமான அளவு தடுப்பூசிகளை பெறுவதிலும், தடுப்பூசி இயக்கத்தில் அனைவரினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

எனினும் தடுப்பூசி பெற்றுக் கொள்ளும் கப்பிணிப் பெண்களின் ஏனைய நோய் நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்ததன் பின்னர் அவர்களின் சம்மதத்துடன் தடுப்பூசி ஏற்றப்பட உள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்தார்.