November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்’: ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்

இலங்கையில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

இலங்கை அரசாங்கமும் ஆடை உற்பத்தி நிறுவன உரிமையாளர்களும் ஊழியர்களின் உரிமைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்று ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காலத்தில் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று குறித்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

கொரோனா பரவல் தீவிரமடைந்ததால் இலங்கை முழுவதும் முடக்கப்பட்டிருந்த நிலையில், ஆடைத் தொழில்துறையை இயங்க அனுமதித்தமை தொடர்பில் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.

பல்வேறு ஆடைத் தொழிற்சாலைகளிலும் கொரோனா தொற்று ஏற்பட்டதும், ஊழியர்கள் பாதிக்கப்பட்டதும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆடை உற்பத்தித் தொழிலாளர்கள் நோய்வாய்ப்பட்டாலும், தனிமைப்படுத்தப்பட்டாலும் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.