சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து 800 மில்லியன் அமெரிக்க டொலரைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கை விண்ணப்பித்துள்ளது.
இலங்கையின் டொலர் கையிருப்பை அதிகரிப்பதற்காக இந்த தொகை கோரப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
800 மில்லியன் நிதியுதவி மூலம் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கான டொலர் கையிருப்பை பலப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் மத்திய வங்கியின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாதம் இலங்கை ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் இறையாண்மை பிணைமுறிகளை திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது.
நாட்டின் டொலர் கையிருப்பை ஈடுசெய்வதற்கு மேலும் 1200 மில்லியன் டொலர் அமெரிக்க டொலர் நிதி தேவைப்படுவதாக மத்திய வங்கியின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.