July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அனைவருக்கும் சம கல்வி வாய்ப்பு வேண்டும்’: ஆதிவாசிகள் தலைவர் ஜனாதிபதி, பிரதமரிடம் வேண்டுகோள்

இலங்கையின் ஆதிவாசிகள் தலைவர் ஊருவரிகே வன்னிலஎத்தோ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவிடம் முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

நாட்டில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலையிட்டு, தீர்வு வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கையில் அனைத்து மாணவர்களுக்கும் சம கல்வி வாய்ப்பு கிடைப்பதில்லை என்று ஆதிவாசிகள் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா தொற்றுடன் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இணையவழி கல்வியைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர்களின் பணி பகிஷ்கரிப்பால் எதிர்காலத்தில் நாட்டைப் பொறுப்பேற்கவுள்ள இளம் பரம்பரையினர் பாதிக்கப்படுவதாகவும் வன்னிலஎத்தோ தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளைத் தொடர்வதற்கான வசதிகளை ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலையிட்டு, வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.