இலங்கை ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுத்த இணையவழி பணி பகிஷ்கரிப்பில் 14 ஆசிரியர் சங்கங்கள் இணைந்துகொண்டுள்ளன.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட 16 பேர் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே, ஆசிரியர்கள் இன்று முதல் இணையவழி கற்பித்தலில் இருந்து விலகிக்கொண்டுள்ளனர்.
தனிமைப்படுத்தல் சட்டத்தைக் காரணம் காட்டி, மக்களின் நியாயமான எதிர்ப்புத் தெரிவிக்கும் உரிமையை அடக்க முற்படுவதாக ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
தனிமைப்படுத்தலுக்கு அனுப்புவதன் மூலம் தொழிற்சங்கங்களின் பலத்தை கட்டுப்படுத்த முடியாது என்றும் ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இணையவழி கற்பித்தலில் உள்ள சவால்களுக்கு தீர்வு வழங்கக் கோரியும் ஆசிரியர்கள் இவ்வாறு இணையவழி கற்பித்தலை பகிஷ்கரித்துள்ளனர்.