January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் நான்கு மாவட்டங்களில் பல்வேறு பகுதிகள் முடக்கம்!

கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து இலங்கையின் நான்கு மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அம்பாறை, கண்டி, கொழும்பு மற்றும் யாழ் மாவட்டத்தின் சில பகுதிகளே, இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தலை பொலிஸ் பிரிவில் உள்ள தும்போவில வடக்கு கிராம சேவகர் பிரிவு முடக்கப்பட்டுள்ளன.

யாழ். மாவட்டத்தின் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவின் வடமராட்சி வடக்கு பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரிவின் பொத்துவில் 13 கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கண்டி மாவட்டத்தின் சுதும்பல மேற்கு மற்றும் சுதும்பல கிழக்கு கிராம சேவகர் பிரிவில் உள்ள சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இன்று காலை 6 மணி முதல் குறித்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

இதேநேரம், குருநாகல் மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.