October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இரண்டாம் தொகுதி பைசர் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்தன

இலங்கைக்கு மேலும் 26 ஆயிரம் டோஸ் பைசர் தடுப்பூசிகள் இன்று காலை கிடைக்கப் பெற்றுள்ளன.

அரச மருந்தக கூட்டுத்தாபனம் கொள்வனவு செய்த இரண்டாம் தொகுதி பைசர் தடுப்பூசிகளே, இன்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தன.

அரச மருந்தக கூட்டுத்தாபனம் 2 இலட்சம் பைசர் தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்யவுள்ளதோடு, மூன்றாம் தொகுதி அடுத்த வாரம் கிடைக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இரண்டாம் தொகுதி பைசர் தடுப்பூசிகள் மன்னார் மாவட்ட தடுப்பூசி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.