January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அரசாங்கத்திற்கு எதிராக போராடுவோர் அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும்’

அரசாங்கத்தில் இருந்து கொண்டு அரசாங்கத்திற்கு எதிராக போராடும் அணியினர் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி எமக்கு எதிராக போராடுவதே சிறந்ததாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினால் தான் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் இடம் கிடைத்துள்ளது. எம்முடன் இணைந்து ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியாக போட்டியிட்ட ஒரே காரணத்தினால் தான் அவர்களுக்கு 14 ஆசனங்களேனும் கிடைத்துள்ளது.ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியாக அவர்கள் தேர்தலை சந்தித்திருந்தால் ஒரு ஆசனமேனும் கிடைத்திருக்காது என்பதை அவர்களே நினைவில் வைத்திருக்க வேண்டும்.

அதுமட்டுமல்ல, நாமும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்தே எமது அரசியல் பயணத்தை ஆரம்பித்தோம்.ஆனால் இன்றும் நாம் சுதந்திர கட்சியின் பிரதான கட்சியொன்றை உருவாக்கி எமது மக்களை ஈர்த்துள்ளோம்.அவ்வாறு இருக்கையில் எமக்கு வேறு கட்சியுடன் ஒட்டிக்கொண்டு செயற்பட வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.