
“நான் என் வாழ்க்கையில் ஒருபோதும் பயப்படவில்லை. நான் எப்போதும் நிதானமாக இருக்கின்றேன்” என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
அமைச்சு பதவியை மீள பெற்றுக் கொள்ள அல்லது மாற்றியமைக்க ஜனாதிபதிக்கு பூரண அதிகாரம் இருக்கி்ன்றது. அது தொடர்பில் நான் கவலைப்படுவதும் இல்லை என அவர் கூறியுள்ளார்.
ஹங்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் உரையாற்றிய போது அவர் இதனை குறிப்பிட்டார்.
அமைச்சு பதவியுடன் நான் அரசாங்கத்துக்கு வரவில்லை.இதனை என்னால் கொண்டு செல்லவும் முடியாது. நாம் செய்யும் நன்மை, தீமை மட்டுமே நமக்கானது எனவும் அமைச்சர் உதய கம்மன்பில இதன் போது மேலும் கூறினார்.
பிரதமரின் பரிந்துரைக்கமைய ஜனாதிபதிக்கு எந்தவொரு அமைச்சு பதவியையும் மீள பெறவும் முடியும் .அதனை மாற்றியமைக்கவும் முடியும்.
அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி எனக்கு எதிராக கொண்டு வந்திருக்கும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முகம்கொடுக்க நான் தயாராகவே இருக்கின்றேன்.
நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெறுமா,இல்லையா என்பது எனக்கு தெரியாது.20 ஆம் திகதி அறிந்து கொள்ளலாம் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.